Theme Check

அதிமுகவில் உட்கட்சி பூசல்.. சசிகலாவுடன் இணைந்தது அண்ணா திராவிடர் கழகம்..!

அதிமுகவில் உட்கட்சி பூசல்.. சசிகலாவுடன் இணைந்தது அண்ணா திராவிடர் கழகம்..!

அதிமுகவில் உட்கட்சி பூசல்.. சசிகலாவுடன் இணைந்தது அண்ணா திராவிடர் கழகம்..!
X

வி.கே.சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருடைய சகோதரரான வி. கே.திவாகரனால் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி தொடங்கப்பட்டது அண்ணா திராவிடர் கழகம்.

தற்போது, அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைப்பதாக அறிவித்தார்.அதன்படி, திவாகரனின் கட்சி இணைப்பு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், திவாகரன் தனது அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலாவுடன் இணைத்து கொண்டார். மேடையில், சசிகலாவுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சசிகலா முன்னிலையில் மேடையில் பேசும்போது, சசிகலாவுக்கு அனைவரும் உதவி செய்யக்கூடிய கட்டாயத்தில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் இருந்து 2500-க்கும் மேற்பட்ட இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைய உள்ளனர் என்றும் திவாகரன் கூறினார்.

Next Story
Share it