தமிழ்நாடு அரசுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள பாராட்டு!!
தமிழ்நாடு அரசுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள பாராட்டு!!

கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் சந்தித்த சிக்கல்கள், காலநிலை மாற்றத்தால் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள், தரமற்ற கல்வி, சுகாதாரம் கிடைக்காத நிலை போன்ற இடர்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசுடன் யுனிசெஃப் இந்தியா இணைந்து குழந்தைகள் உரிமைகளுக்கான ஒருங்கிணைந்த சமூக கொள்கை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக யூனிசெஃப் இந்தியா தலைவர் ஹுயூம் ஹி பன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ’கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. அதற்கு பாராட்டுக்கள். அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உள்ளது என்றார்.

90% பேருக்கு முதல் தவணையும், 80% பேருக்கு 2ஆம் தவணையும், 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 70% பேருக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள். அரசின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். கல்வியறிவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கொரோனாவால் கற்றல் இழப்பை மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வியில் உள்ள இடர்பாடுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் இடைவெளி வரக்கூடும். தமிழ்நாடு, கேரளா இடமிருந்து திட்டங்கள் எடுத்து மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பீட்டு பார்கிறோம்.
கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் அழைத்து வர உலக நாடுகள் சவால்களை சந்தித்தது. ஆனால் கொரோனா பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. தமிழ்நாடு "Game Changer" ஆக இருந்தது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
newstm.in

