Theme Check

கள்ளக்காதலுக்கு இடையூறு.. 3 வயது குழந்தையின் மூச்சை நிறுத்திய பாசக்கார தாய்..!

கள்ளக்காதலுக்கு இடையூறு.. 3 வயது குழந்தையின் மூச்சை நிறுத்திய பாசக்கார தாய்..!

கள்ளக்காதலுக்கு இடையூறு.. 3 வயது குழந்தையின் மூச்சை நிறுத்திய பாசக்கார தாய்..!
X

கேரள மாநிலம், பாலக்காடு ஏலப்புல்லி கிராமம் அருகே உள்ள நென்மேனியில் வசிப்பவர் சமீர். இவரது மனைவி ஆஷி (22). இந்தத் தம்பதிக்கு முகமது சானு (3) என்ற குழந்தை உள்ளது.

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சமீர் தனியாகவும், ஆஷி தனியாகவும் வசித்து வருகின்றனர். குழந்தை சானு ஆஷியுடன் இருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை சிறுவன் முகமது ஷானு வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், பாலக்காடு கசபா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார், சிறுவன் இறந்தது குறித்து தாய் ஆஷியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர், குழந்தை இறந்தது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

பின்னர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். பிரேத பரிசோதனையில், சிறுவனின் கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத் திணறி மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது.

இதனால், தாய் ஆஷி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது கள்ளக்காதலுக்கு மகன் தடையாக இருப்பதால் கழுத்தை நெரித்து மூச்சை அடக்கி கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார், ஆஷியை கைது செய்து பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it