Theme Check

சசிகலா அளித்த பேட்டி.. உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. அப்படி என்ன சொன்னார்..?

சசிகலா அளித்த பேட்டி.. உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. அப்படி என்ன சொன்னார்..?

சசிகலா அளித்த பேட்டி.. உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. அப்படி என்ன சொன்னார்..?
X

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பரபரப்புடன் கூடி, சலசலப்புடன் நிறைவுபெற்றது.

இதனிடையே, 23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அதன்பின்னர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, அதிமுகவில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “அதிமுக விதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வி.கே.சசிகலாவுக்கு மலர் தூவி அதிமுக கொடியுடன் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஓபிஎஸ்-சை கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், “அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது நிச்சயம் செல்வேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி அதிமுகவில் எல்லாம் சரியாகவே நடக்கும்.

நிச்சயமாக சொல்கிறேன். எதேச்சதிகாரம் என்பது இதுவரை அதிமுகவில் நிச்சயம் கிடையாது. யாரையும் யாரும் அதிமுகவில் இருந்து நீக்க முடியாது. அதுபோல் செய்ய வேண்டும் என யாரும் நினைத்தாலும் அவர்களுக்கு தொண்டர்களே பதிலடி கொடுப்பார்கள்” எனக் கூறினார்.

அதிமுகவில் எதேச்சதிகாரமாக யாரும் யாரையும் நீக்க முடியாது என சசிகலா அதிரடியாக கூறியுள்ளது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story
Share it