Theme Check

கோவை வாக்காளர்களுக்கு அயர்ன் பாக்ஸ், கொலுசு.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி..!

கோவை வாக்காளர்களுக்கு அயர்ன் பாக்ஸ், கொலுசு.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி..!

கோவை வாக்காளர்களுக்கு அயர்ன் பாக்ஸ், கொலுசு.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி..!
X

கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு 24-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், “இந்து என்பது வாழ்வியல் முறை. பிற சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சிலர் இந்து மதத்தை தவறாக சித்தரிக்கின்றனர்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் கோவில்கள் இடிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த 8 மாத கால திமுக அரசு அனைத்து மதங்களுக்குமான அரசாக இல்லை.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தமிழக அரசு முழு பலத்தையும் பயன்படுத்தி மறைக்க முயற்சிக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ஹிஜாப் விவகாரத்தை வைத்து தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அரசியல் நடைபெறுகிறது.

குடியரசு தின ஊர்தி விவகாரத்தில் பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை முதலமைச்சர் ஸ்டாலின் உச்சரித்தது திமுகவில் இருந்து வந்துள்ள மாற்றம்.

முதலமைச்சர் சொன்னதுபோல மக்கள் இருக்கும் இடங்களுக்கு ஊர்தி வரவில்லை. கோவை மாநகராட்சியை பாஜக கைப்பற்றும்போது குண்டு வெடிப்பு நினைவுச்சின்னம் அமைக்கப்படும்.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தமிழகம் பற்றி தெரியாமல் பேசுகிறார். கூட்டணியில் காங்கிரஸ் கட்சி செல்போன் எண்கள் போல குறைந்த வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.

கோவையில், கரூர் மாடலில் பொருட்களைக் கொடுத்து திமுக வாக்கு சேகரித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. அயர்ன் பாக்ஸ், கொலுசு கொடுக்கும் திட்டங்களை திமுகவினர் இன்னும் சில நாட்களில் நிறைவேற்றுவார்கள்” என அவர் தெரிவித்தார்.

Next Story
Share it