Theme Check

ஆட்சியை இழந்ததும் சிறைக்கு செல்கிறாரா இம்ரான் கான்.. புதிய அரசு புதிய வழக்கு !!

ஆட்சியை இழந்ததும் சிறைக்கு செல்கிறாரா இம்ரான் கான்.. புதிய அரசு புதிய வழக்கு !!

ஆட்சியை இழந்ததும் சிறைக்கு செல்கிறாரா இம்ரான் கான்.. புதிய அரசு புதிய வழக்கு !!
X

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசு நகையை விற்றதாக கூறி அவர் மீது அந்நாட்டு அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோற்றதால், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீஃப் பொறுப்பேற்றுள்ளார்.

பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமைந்ததும் முதல்கட்டமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பழிவாங்க துடித்து வருகிறது. இதற்காக, இம்ரான் கான் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது குறித்த மறைமுக விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
sherif
அதன்படி, பிரதமராக இருந்தபோது வெளிநாடு ஒன்றில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட நகையை இம்ரான் கான் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் சட்டத்திட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள், அந்நாட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஆனால், இம்ரான் கான் அந்த நகையை கருவூலத்தில் ஒப்படைக்காமல் சுமார் ரூ.18 கோடிக்கு விற்றதாக புகார் எழுந்துள்ளது. அதற்கு பதிலாக ஒரு சில லட்சங்களை மட்டுமே அவர் கரூவூலத்தில் வழங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரத்தை புதிய அரசு கையில் எடுத்துள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எஃப்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் இம்ரான் கான் சிறைக்கு செல்வது உறுதி.


newstm.in


Next Story
Share it