Theme Check

மக்கள் தொலைக்காட்சி மூடப்படுகிறதா?

மக்கள் தொலைக்காட்சி மூடப்படுகிறதா?

மக்கள் தொலைக்காட்சி மூடப்படுகிறதா?
X

மக்கள் தொலைக்காட்சி ஜூலை 31ஆம் தேதியுடன் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் தொலைக்காட்சி கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். மக்கள் தொலைக்காட்சி வந்த பிறகு சேனல்கள் மத்தியில் அது தனி கவனம் பெற்றது.

காரணம் ஆங்கில கலப்பு இல்லாத ஒரே தொலைக்காட்சி என்ற பெருமையை கொண்டது மக்கள் தொலைக்காட்சி. சேனல் தொடங்கி 16 வருடங்கள் ஆன நிலையில், வரும் 31ஆம் தேதியுடன் சேனல் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

makkal-tv

அங்கு பணிபுரியும் பணியாளர்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்த நிலையில், நிறுவனத்தின் சிஇஓ அனைவருக்கும் தொழிலாளர் நலச்சட்டப்படி செட்டில்மென்ட் வழங்கப்படும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

நிறுவனத்தில் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஊதிய உயர்வு என்று பணியாளர்கள் சென்றதாகவும், ஆனால் இந்த அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு சொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it