Theme Check

கணவரை பிரிந்து வாழ்கிறாரா விஜய் டிவி பிரியங்கா ?: சர்ச்சை கிளப்பிய பிரபல நடிகர்- வீடியோ !

கணவரை பிரிந்து வாழ்கிறாரா விஜய் டிவி பிரியங்கா ?: சர்ச்சை கிளப்பிய பிரபல நடிகர்- வீடியோ !

கணவரை பிரிந்து வாழ்கிறாரா விஜய் டிவி பிரியங்கா ?: சர்ச்சை கிளப்பிய பிரபல நடிகர்- வீடியோ !
X

விஜய் டிவி மூலம் பிரபலமானவர் பிரியங்கா. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவருக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஜய் டிவியின் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்றனர்.

பிக் பாஸ் 5ஆவது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

priyanka

இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், பிக் பாஸ் போட்டியாளருமான பிரியங்கா விவகாரத்து செய்துவிட்டார் என்றும் அதற்கான காரணம் குறித்தும் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் அவர் மேலும் பேசுகையில், விஜய் டிவியில் வேலை செய்பவர் தான் பிரியங்காவின் கணவர் பிரவீன் குமார்.

priyanka

விஜய்டிவிக்கு பிரியங்காவை அவர் தான் அடையாளம் காட்டினார். அந்த நன்றி கடனுக்காக தான் பிரியங்கா அவரை திருமனம் செய்துகொண்டார். இருவரும் சில காலம் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல பிரியங்காவிற்கு அவரை விட பணமும் புகழும் அதிகரித்தது. இதனால் பிரியங்காவிற்கு அகந்தை ஏற்பட்டுவிட்டு இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.

priyanka

இதன்காரணமாக இவர்கள் இருவரும் பல மாதங்களாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிரியங்கா அங்கும் கணவர் பற்றி எதுவும் பேசவில்லை. அங்கிருந்து வந்த பின்னரும் நேராக தாய் வீட்டுக்குத் தான் சென்றாரே தவிர கணவர் வீட்டிற்கு செல்லவில்லை இவ்வாறு கூறியுள்ளார் ரங்கநாதன். பயில்வான் ரங்கநாதன் இந்த பேட்டி தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.


newstm.in

Next Story
Share it