தனிக்கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்? – புதிய பரபரப்பு!!
தனிக்கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்? – புதிய பரபரப்பு!!

அதிமுகவின் பெரும்பாலான தலைவர்கள் ஈபிஎஸ் பக்கம் இருப்பதால் ஓபிஎஸ்-இன் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த 4 மாதங்களுக்குள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், அதிமுக பொதுச் செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ்-இன் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் மேலோங்கியுள்ளது. ஒன்று தனிக்கட்சி தொடங்குவது, இரண்டாவது சசிகலாவுடன் இணைந்து ஈபிஎஸ்-க்கு எதிராக அரசியல் செய்வது, 3ஆவது ஈபிஎஸ் உடன் சமரசம் செய்து கொள்வது, 4ஆவது தேசிய கட்சி அல்லது மாநிலக் கட்சியில் சேர்வது என்று ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த சூழலில் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவதையே விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய அடுத்த நகர்வுக்கான வேலை ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் என்பதில் ஐயம் இல்லை.
newstm.in

