தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டுப்பாடு நியாயமா..?: மாநில அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!
தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டுப்பாடு நியாயமா..?: மாநில அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மின்சார ரயில் உட்பட பொது வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா, நீதிபதி எம்.எஸ். கார்னிக் அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது.
இந்தவழக்கு விசாரணையின்போது, ‘வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மின்சார ரயில் உட்பட பொது வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தான் தடுப்பூசி போடாதவர்களுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ’ என மாநில அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘2020, 2021-ம் ஆண்டுகளைப் போல தற்போது கொரோனா பரவல் அதிகமாக இல்லை. மேலும், மாநில அரசு இந்த கட்டுப்பாடுகளை முதல் முதலாக விதித்தபோது இருந்த சூழல் குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகள் தற்போது நியாயமானது தானா? தற்போது உள்ள சூழலில் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பது தேவைதானா..?’ என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

