Theme Check

இது வேறையா? - பழங்களின் விலையும் கடும் உயர்வு !!

இது வேறையா? - பழங்களின் விலையும் கடும் உயர்வு !!

இது வேறையா? - பழங்களின் விலையும் கடும் உயர்வு !!
X

சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து ஒரு லிட்டர் நூறு ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சைக்கிள் வாங்கி வருகின்றனர். இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

இதன்காரணமாக ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் தலையில் தான் எல்லாம் வந்து விழுகிறது. இதனிடையே, கோடை வெயில் மக்களை வாட்டி வருகிறது. இதனால் பழச்சாறுகளை வாங்கி அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. மக்களும் பழ வகைகளை வீட்டில் வாங்கிவைத்து சாப்பிடுகின்றனர். அவ்வப்போது பழச்சாறு போட்டு குடித்து வருகின்றனர்.

fsd

இந்த நிலையில் தற்போது பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு பழச்சந்தையில், கிலோவுக்கு பத்து ரூபாய் தொடங்கி 150 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மாதுளை ஒரு வாரத்திற்கு முன்பு கிலோவுக்கு 200 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 350 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சாத்துக்குடியின் விலை 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல திராட்சை, பப்பாளி, ஆரஞ்சு பழங்களின் விலை கிலோவிற்கு 20 முதல் 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பழங்களின் வரத்து குறைவாக இருப்பதும் கோடைக்காலம் என்பதால் பழங்களின் தேவை அதிகமாக இருப்பதும் விலை ஏற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it