Theme Check

தமிழகத்தை தாக்க வருகிறதா கோடைக்கால புயல்!?

தமிழகத்தை தாக்க வருகிறதா கோடைக்கால புயல்!?

தமிழகத்தை தாக்க வருகிறதா கோடைக்கால புயல்!?
X

தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, பின்னர் நகர்ந்து வந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவக்கூடும்.

மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். மார்ச் 21இல் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்புள்ளது. இப்புயல் வரும் 22ஆம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sea Rough

தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு, 75 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் நாளை வரை அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் நாடு முழுதும் கோடை காலம். இந்த காலக்கட்டத்தில் புயல் சின்னங்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மிக அரிதாகவே ஏற்படும். 1891 முதல் 2020ஆம் ஆண்டுகள் வரையில் அரபிக்கடலில் 2 புயல்களும், வங்காள விரிகுடாவில் 6 புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன.

cyclone

அதில் 2 புயல்கள் மட்டுமே கரைகளைக் கடந்தன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இந்த புயலினால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it