Theme Check

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா பிரபல கால்டாக்சி நிறுவனம்..?

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா பிரபல கால்டாக்சி நிறுவனம்..?

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா பிரபல கால்டாக்சி நிறுவனம்..?
X

இப்போதைய சூழலில், லாபம் இல்லாமல் இயங்கி வருவதால், பிரபல கால் டாக்சி நிறுவனமான உபெர் தனது சேவைகளை நிறுத்தி, இந்தியாவில் இருந்து வெளியேறப் போவதாக சமீபத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வந்த செய்தியை உபெர் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘கடந்த 9 வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் எங்கள் நிறுவனம் அதன் சேவையை தொடங்கியது.

இப்போதும் எங்களுக்கு இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவில், நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் எங்கள் சேவை உள்ளது. வருங்காலங்களில் அதை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

உபெர் நிறுவனத்துக்கு பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனமான ஓலா, கடும் போட்டியாளராக உள்ளது. ஆனால், இந்த இரு நிறுவனங்களும் அதிக கமிஷன் தொகை பெறுவதாக அதன் ஓட்டுநர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.

Next Story
Share it