போர் முடிவுக்கு வருகிறதா? - உக்ரைன் - ரஷ்யா இடையே இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை !!

போர் முடிவுக்கு வருகிறதா? - உக்ரைன் - ரஷ்யா இடையே இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை !!

போர் முடிவுக்கு வருகிறதா? - உக்ரைன் - ரஷ்யா இடையே இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை !!
X

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மூன்றாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 7) நடைபெற வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபரின் அதிகாரியை மேற்கோள் காட்டி உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில், ‘உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த வாரத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளின் போது, ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட நகரங்களில் சிக்கியுள்ள மக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும். அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை அளித்தல் வேண்டும். பாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

அதன் தொடர்ச்சியாக இருநாடுகளுக்கு இடையிலான 10வது நாளில், உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

russia attack

நேட்டோ உறுப்பு நாடுகள் உதவ முன்வராததால் ரஷ்ய படைகள் தனது விமானத் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இன்று முதல் இறக்கும் ஒவ்வொரு மக்களும் மக்களும் உங்களால் இறந்ததாக கருதுகிறோம், பகீரங்கமாக நேட்டோ அமைப்பை குற்றம்சாட்டியிருந்தார் உக்ரைன் அதிபர். தற்போது முன்பைவிட ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முடிவு எட்டப்பட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைன் அதிபரின் உரையில் சிறிது தயக்கம் தென்படுகிறது. இதனால் இன்றைய பேச்சுவார்த்தையில் உக்ரைன் சிறிது விட்டுக்கொடுத்து போரை முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

russia attack

இதனிடையே, போர் காரணமாக இதுவரை 1.45 மில்லியன் மக்கள், உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு அமைப்பின் கூற்றுப்படி, 7,87,300 அகதிகள் போலந்துக்கும், 228,700 பேர் மால்டோவாவிற்கும், 144,700 பேர் ஹங்கேரிக்கும், 132,600 பேர் ருமேனியாவிற்கும் 100,500 பேர் ஸ்லோவாக்கியாவிற்கும் சென்றுள்ளனர். உக்ரைனில் குறைந்தது 351 மக்கள் கொல்லப்பட்டதாகவும், 707 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it