தக்காளிக்கும் தக்காளி வைரசுக்கும் தொடர்பு இருக்கா ? ராதாகிருஷ்ணன் விளக்கம்..!!
தக்காளிக்கும் தக்காளி வைரசுக்கும் தொடர்பு இருக்கா ? ராதாகிருஷ்ணன் விளக்கம்..!!

சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
“நுண்கிருமிகளில் பலவகை உண்டு.’தக்காளி வைரஸ்’ என்று கேரளாவில் சூட்டியதற்கு காரணம் என்னவெனில், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கன்னங்களில் வரும் ரேசஸ் சிவப்பு நிறத்தில் இருப்பதால்தான் ‘தக்காளி வைரஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, தக்காளிக்கும் தக்காளி வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனினும், நல்ல தண்ணீரில் வரும் கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
கொல்லம் பகுதியில் இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு பாராசிட்டாமல் கொடுத்தால் தானாக நோய் குணமாகி விடுகிறது. எனவே,மக்கள் பீதி அடைய வேண்டாம்”, என்று தெரிவித்துள்ளார்.
Next Story

