சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் கட்டலையா..?: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்..!
சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் கட்டலையா..?: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்..!

நடிகர் விஜய் பயன்படுத்திய சிவப்பு நிற மாருதி காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லை என பரவிய தகவலுக்கு விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, நீலாங்கரையில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வாகளிப்பதற்காக சிவப்பு நிற மாருதி செலிரியோ காரில் வந்தார் நடிகர் விஜய்.

அவர் வந்த அந்த காருக்கு இன்சூரன்ஸ் கட்டாமல் பாக்கி வைத்திருப்பதாக தகவல்கள் பரவியது. அதோடு, கார் இன்சூரன்ஸ் பாக்கி வைத்து, அது புதுப்பிக்காமல் இருப்பதற்கான ஆர்டிஓ செலானையும் சிலர் பப்ளிசிட்டிக்காக ட்விட்டரில் பரவ விட்டனர். அதை உண்மை என நம்பி பலரும் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், விஜய் சார்பில் ரியாஸ் அகமது என்பவர் விஜய் பயன்படுத்திய மாருதி காரின் இன்சூரன்ஸ் காப்பியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், விஜய் பயன்படுத்தி வரும் மாருதி செலிரியோ காருக்கான இன்சூரன்ஸ் 2022-ம் ஆண்டு மே மாதம் வரை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை வைத்து விஜய்யின் ரசிகர்கள், விஜய் பற்றி தவறான தகவல் பரப்பியவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.
சமீபத்தில், ஏற்றுமதி காருக்கான வரி விலக்கு தொடர்பான வழக்கில், விஜய்யிடம் அபராதம் வசூலிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், மற்றொரு கார் சர்ச்சையில் விஜய் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

