Theme Check

ஸ்டாலின் கண்டுபிடித்த திராவிட மாடல் இதானா..?: கேட்கிறார் டிடிவி தினகரன்..!

ஸ்டாலின் கண்டுபிடித்த திராவிட மாடல் இதானா..?: கேட்கிறார் டிடிவி தினகரன்..!

ஸ்டாலின் கண்டுபிடித்த திராவிட மாடல் இதானா..?: கேட்கிறார் டிடிவி தினகரன்..!
X

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரைக் கூறி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா..?

‘எந்த அமைச்சர் தவறு செய்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது முதல்வர் ஸ்டாலின் கூறியது இதைத்தானா..?

சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்..?

ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பாற்ற போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா..?” என தெரிவித்துள்ளார்.

Next Story
Share it