Theme Check

திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..?: கேட்கிறார் ராதாரவி..!

திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..?: கேட்கிறார் ராதாரவி..!

திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..?: கேட்கிறார் ராதாரவி..!
X

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த போராட்டத்தில் அண்ணாமலை, ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ராதாரவி, “அண்ணாமலையை வளர்த்து விட்டதே திமுகதான்.

எந்த நேரத்திலும் திமுக ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மோடியும், அமித்ஷாவும் கருவறுத்து விடுவார்கள். திராவிட மாடல் என்பதெல்லாம் சோறு போடாது. அண்ணாமலை பழைய ஆளாக மாறினால் நீங்கள் என்ன ஆவீர்கள்..?

பாஷை தெரியாத கர்நாடகாவிலேயே பப்பு விட்டு ஆட்டியவர் அண்ணாமலை. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று பல பேரை நான் பார்த்துள்ளேன்.

ஆனால், அண்ணாமலை போல் பேச்சுத்திறமை யாருக்கும் இல்லை. கருணாநிதியின் பெயர் போல் பத்திரிகைகளில் தினந்தோறும் அண்ணாமலையின் பெயர் வந்துகொண்டே இருக்கிறது.

அண்ணாமலையை வாடா போடா என்று யாரேனும் சொன்னால் வருத்தப்பட வேண்டாம். கடவுள் முருகனை டேய் முருகா என்று தான் அழைக்கின்றனர்.

உங்களை கடவுளாக எண்ணுவதால் தான் சில அமைச்சர்கள் வாடா, போடா என்று கூப்பிடுகின்றனர். உங்களைத் திட்டினால் தான் அமைச்சர் பதவி நிலைக்கும்.

டெண்டர், விற்பனை என்று திமுக அரசு செய்யும் விஷயங்கள் அனைத்தும் ஸ்டாலின் குடும்பத்துக்கே லாபத்தை ஈட்டித் தருகிறது இன்று ஈசிஆரில் ஜி ஸ்கொயர் அனுமதியின்றி இடம் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

தமிழ்ப் பாடத்தில் 40,000 பேர் பெயில் ஆகியிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் மாநில கல்வி கொள்கை. திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..? பொதுத் தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல். இதுதான் திமுக அரசின் சாதனையா..?” என்று கேள்வி எழுப்பினார்.

Next Story
Share it