Theme Check

அனைத்து கார்களிலும் இது கட்டாயம்.. விரைவில் வெளியாகவுள்ளது அறிவிப்பு..!

அனைத்து கார்களிலும் இது கட்டாயம்.. விரைவில் வெளியாகவுள்ளது அறிவிப்பு..!

அனைத்து கார்களிலும் இது கட்டாயம்.. விரைவில் வெளியாகவுள்ளது அறிவிப்பு..!
X

கார்களில் தற்போது, டிரைவர், அவர் அருகே அமர்ந்து பயணிப்பவர் மற்றும் பின் இருக்கையில் இரு முனைகளிலும் பயணிப்பவர்கள் 2 பேர் என ‘சீட் பெல்ட்’ வசதி உள்ளது.

இனிமேல், பின் இருக்கையில் மத்தியில் உள்ளவர்களும் ‘சீட் பெல்ட்’ அணிவதற்கு வசதியாக ‘சீட் பெல்ட்’ கட்டாயம் ஆக்கப்படுகிறது.

அது மட்டுமின்றி, தற்போது பெரும்பாலான கார்களில் ‘2 பாயிண்ட் சீட் பெல்ட்’ பயன்படுத்தப்படுகிறது. இனி, விமானத்தில் பயன்படுத்துவது போன்று ஆங்கில எழுத்தான ‘ஒய்’ வடிவ ‘சீட் பெல்ட்’தான் அனைத்து இருக்கைகளிலும் பொருத்த வேண்டும் என்பது கட்டாயம் ஆகிறது. இதனால் கார் பயணம் பாதுகாப்பானதாக ஆகி விடும்.
Now it is mandatory to provide 'three-point' seat belt for all the seats in  the car, Nitin Gadkari's big announcement .. - Navabharat News
‘3 பாயிண்ட் சீட் பெல்ட்’ என்பது ‘2 பாயிண்ட் சீட் பெல்ட்’டை விட பாதுகாப்பானது. ஏனென்றால், இதை அணிகிறபோது உடலை முழுமையாக அசையாமல் ‘பெல்ட்’ பிடித்துக்கொள்ளும்.

தோளையும் இறுக்கி பிடித்துக் கொள்ளும். இதனால் விபத்து ஏற்பட்டாலும் படுகாயம் தவிர்க்கப்படும். பயணி தூக்கி வீசப்பட மாட்டார்.

அந்த ‘3 பாயிண்ட் பெல்ட்’ வசதியை காரில் ஏற்படுத்துவதை கட்டாயம் ஆக்கும் அறிவிப்பை மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, டில்லியில் நேற்று நிருபர்களிடம் வெளியிட்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘காரில் முன்பக்கம் பார்த்து பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் ‘3 பாயிண்ட் சீட் பெல்ட்’டுகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதை கட்டாயம் ஆக்கும் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளேன்’’ என குறிப்பிட்டார். இந்த புதிய விதி எப்போது அமலுக்கு வரும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
Next Story
Share it