Theme Check

இஷ்டத்திற்கு ஆடை அணிவது பெண்ணுரிமை அல்ல.. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு..!

இஷ்டத்திற்கு ஆடை அணிவது பெண்ணுரிமை அல்ல.. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு..!

இஷ்டத்திற்கு ஆடை அணிவது பெண்ணுரிமை அல்ல.. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு..!
X

சென்னை சாஸ்திரி பவனில் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து நாளும் பெண்களுக்கான நாள்தான் என்பதால் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

பெண்ணுரிமையை நாம் தவறாக பயன்படுத்துகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவதுதான் பெண்ணுரிமை என நினைக்கின்றனர். ஆனால், நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் உள்ளது.

பெண்கள் உடையில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. பெண்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தால்தான் பெண்களிடம் சரியாக நடந்து கொள்வார்கள். பெண்ணுரிமை எது என நாம் நினைப்பதில்தான் பிரச்னை ஏற்படுகிறது.

நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் உடை அணியக்கூடாது. உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

நல்லா படிப்பேன், சாதனை செய்வேன், மேலும் வளர்ச்சி அடைவேன் என்பதுதான் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை” என்று அவர் பேசினார்.

Next Story
Share it