அன்னைத்தமிழில் அரச்சனை செய்வது கட்டாயமில்லை..!!
அன்னைத்தமிழில் அரச்சனை செய்வது கட்டாயமில்லை..!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வெயிலில் நிற்கும் பக்தர்களுக்கு குளிரூட்டும் வகையில் அமைக்கப்பட்ட நீர் தெளிப்பான்களை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க பக்தர்களின் வசதிக்காக வரிசையில் நிற்கும்போது நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர், எலுமிச்சை பழ ரசம் வழங்க அறிவுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், அனைத்து கோவில்களிலும் அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டத்தை செயல்படுத்துவது கடினமான காரியம். அன்னைத்தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமல்ல எனவும், விரும்புவோர் தரிசனம் செய்யலாம் என கூறினார்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிலை மாயமானது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

