இப்படியே போனா இனி தங்கம் வாங்க முடியாது போல..!!
இப்படியே போனா இனி தங்கம் வாங்க முடியாது போல..!!

நம்மில் பலர் தங்கம் என்னைக்குமே ஒரு பாதுகாப்பான முதலீட்டாக தான் பார்க்கிறோம். ஏன்ன்னு கேட்டே ஒரு இக்கட்டான சூழல் வரும் போது யாரு கிட்டயும் கடன் வாங்காம நேரடியா போய் அடமானம் வைக்க ஏதுவான ஒரு சொத்தாவே நாம இத பாக்குறோம். அதே நேரத்துல ஒரு கிராம் இன்ன விலைன்னு ஒரு செய்திய கேட்டுட்டு நாம கடைக்கு ஏறி இறங்குனா செய்கூலி இவ்வளவு, சேதாரம் இவ்வளவுன்னு கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்ச காச மொத்தம கொண்டு போய் நகைக்கடை காரங்க கைல கொடுப்போம். தங்க நகைகளை அணிவதோடு பெண்கள் அவசரகாலத்தில் உதவிக்காவும் அதை பாதுகாத்து வைக்கிறார்கள்.
அப்படிப்பட்ட தங்கம் இனி வாங்குவது கஷ்டம் தான் போல...ஏனென்றால் கடந்த 10 நாளில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1500-க்கு மேல் உயர்ந்துள்ளது.இன்றும் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.கடந்த 5 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 36,336 ஆக விற்பனையான நிலையில் இன்று பிப்ரவரி 15 ஒரு சவரன் தங்கம் 37,904 விற்பனையாகிறது
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,904-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து, ரூ.4,738-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.69,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.