Theme Check

மெட்ரோ ரயிலில் பயணிக்க இன்று முதல் இதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் !!

மெட்ரோ ரயிலில் பயணிக்க இன்று முதல் இதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் !!

மெட்ரோ ரயிலில் பயணிக்க இன்று முதல் இதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் !!
X

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் இன்று (ஜூலை 7) முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, சென்னையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று (ஜூலை 07) முதல் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.

metro

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள், மால்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


newstm.in

Next Story
Share it