Theme Check

18-ம் தேதி முதல் வீடு தேடி வரும் இட்லி மாவு.. அஞ்சல்துறை அசத்தல் திட்டம்..!

18-ம் தேதி முதல் வீடு தேடி வரும் இட்லி மாவு.. அஞ்சல்துறை அசத்தல் திட்டம்..!

18-ம் தேதி முதல் வீடு தேடி வரும் இட்லி மாவு.. அஞ்சல்துறை அசத்தல் திட்டம்..!
X

கர்நாடகத்தில், தபால்துறை மூலம் வீடுகளுக்கே சென்று இட்லி, தோசை மாவு உள்ளிட்ட உணவு பொருட்களை விநியோகிக்கும் திட்டம் தொடங்க உள்ளது.

இதற்காக, கர்நாடக தபால்துறை, ஹல்லி மனே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வருகிற 18-ம் தேதியில் இருந்தே இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இட்லி - தோசை மாவுடன், உடடினயாக சமைத்து சாப்பிடும் உணவு பொருட்களையும் தபால்துறை பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு வந்து கொடுக்க உள்ளது.

இதுகுறித்து கர்நாடக தபால் துறை தலைமை அதிகாரி ராஜேந்திரகுமார் கூறியதாவது; “தபால்துறையும், ஹல்லி மனே நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, வீடுகளுக்கே வந்து இட்லி, தோசை மாவு மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

பொதுமக்களிடம் இருந்து ஆர்டர்களை எடுப்பது, உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் பார்சல் செய்வது, பொதுமக்களின் முகவரியை கொடுப்பது ஹல்லி மனே நிறுவனத்தின் முழு பொறுப்பாகும். தபால் துறை அந்த உணவுகளை மக்களின் வீடுகளுக்கு மட்டும் கொண்டு செல்லும்.

இந்த திட்டத்தை முதற்கட்டமாக பெங்களூருவில் தொடங்குகிறோம். வரும் நாட்களில் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து மற்ற பொருட்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்க தபால் துறை நடவடிக்கை எடுக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் குறித்த தகவல்களை ஒரு நாளுக்கு முன்பாகவே தெரிவிக்கும்படி அந்த நிறுவனத்துடன் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it