Theme Check

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.. அமைச்சரே கூறிய தகவல் !!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.. அமைச்சரே கூறிய தகவல் !!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.. அமைச்சரே கூறிய தகவல் !!
X

அரசு பள்ளி பெருமையின் அடையாளம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சிறார்களிடம் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதனையொட்டி, திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். இந்த பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தப்படும்.
அன்பில்
அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
மேலும், பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக ரூ.36,895.89கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என மாற்றிக்காட்டுவோம், என அவர் பேசினார்.
Newstm.in
Next Story
Share it