“ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்” : அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்!!
“ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்” : அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்று தொடங்கியது.
அப்போலோ மருத்துவர்கள் குறுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கிய அறிவுரைகள் குறித்து அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார்.
அதில், 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்னை இருந்தது என அவர் தெரிவித்தார்.

மேலும், மருத்துவர் சிவக்குமார் அழைத்ததின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சென்று சந்தித்தேன் என்ற கூறிய, பாபு மனோகர் அவருக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன்.
மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன் என்றார். ஆனால், நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என்றும் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார்.
newstm.in

