Theme Check

நகை பிரியர்களை அதிர்ச்சி.. மீண்டும் எகிறியது தங்கம் விலை.. ஒரு சவரன் 38,504 ரூபாய்..!

நகை பிரியர்களை அதிர்ச்சி.. மீண்டும் எகிறியது தங்கம் விலை.. ஒரு சவரன் 38,504 ரூபாய்..!

நகை பிரியர்களை அதிர்ச்சி.. மீண்டும் எகிறியது தங்கம் விலை.. ஒரு சவரன் 38,504 ரூபாய்..!
X

கடந்த சில மாதமாக தங்கம், வெள்ளி விலை ஒரு நிலையில் இல்லாமல் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இதனால், நகை வாங்குவோர் இடையே ஒரு குழப்பமான சூழல் நிலவியது.

கடந்த 2-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.36,192க்கு விற்கப்பட்டது. இந்த விலை ஏற்றம் 11-ம் தேதி வரை தொடர்ந்தது. 12-ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடந்த 24-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 1800 ரூபாய் வரை உயர்ந்தது. இதன் பின்னர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தங்கம் விலை சவரனுக்கு 1200 வரை சரிந்தது.

ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று (28-ம் தேதி) வாரத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.38,504க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,813க்கு விற்கப்படுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து ரூ.70.10க்கு விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றம் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Next Story
Share it