வெறும் குப்பை.. தீபிகா படுகோன் படத்தை கடுமையாக விமர்சித்த கங்கனா !!

வெறும் குப்பை.. தீபிகா படுகோன் படத்தை கடுமையாக விமர்சித்த கங்கனா !!

வெறும் குப்பை.. தீபிகா படுகோன் படத்தை கடுமையாக விமர்சித்த கங்கனா !!
X

தீபிகா படுகோனின் 'கெஹ்ரையான்' படத்தை நடிகை கங்கனா ரனாவத் குப்பை என விமர்சித்துள்ளது, பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் தீபிகா படுகோன் நடிப்பில் கெஹ்ரையான் என்ற படம் தயாராகியுள்ளது. தீபிகா, சித்தான்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தைர்யா கர்வா, நசீருதீன் ஷா, ரஜத் கபூர் ஆகியோர் நடிப்பில் ஷகுன் பத்ரா இயக்கியுள்ள படம் தான் கெஹ்ரையான்.

deepika padukone

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் 'கெஹ்ரையான்' ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தொடர்பாக தீபிகா படுகோனை, கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளம் மூலமாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

deepika padukone

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1965ஆம் ஆண்டு மனோஜ்குமார் நடிப்பில் வெளியான ’ஹிமாலே கி காட் மேன்’ என்ற படத்தின் சூப்பர் ஹிட் பாடல் வீடியோவை பின்னணியாக ஒலிக்கவிட்டு, அதில், நானும் இந்த தலைமுறையைச் சேர்ந்தவள் தான். மில்லினியல் வகையான காதலை நான் அடையாளம் கண்டு புரிந்துகொள்கிறேன்.

deepika padukone

ஆனால், தயவு செய்து நியூ ஏஜ், நவீனத் திரைப்படம் என்கிற பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம். தரமற்றத் திரைப்படங்கள் எப்போதும் தரமற்றவைதான். எந்த வகையான ஆபாசத்தை காட்டியும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. இது மிகவும் அடிப்படையான உண்மை. கெஹ்ரையானில் எந்தவித ஆழமான கருத்துக்களும் சொல்லப்படவில்லை, என்று விமர்சித்துள்ளார்.

ஆனால், கங்கனா ரனாவத் விமர்சனத்துக்கு தீபிகா படுகோனின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it