#KISSDAY SPL - நாம் கொடுக்கும் முத்தத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?
#KISSDAY SPL - நாம் கொடுக்கும் முத்தத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?

எல்லா தருணங்களிலும் எல்லா உயிர்களும் தங்கள் அன்பினை உணர்ச்சிகளை வெளிப்படுத்த முத்தம் தான் உதவுகின்றது. பிறந்த குழந்தையின் பிஞ்சுப் பாதங்களில் கொடுக்கப்படும் முத்தத்தில் தொடங்கி, பதின் வயதுகளில் எதிர் பாலினத்தின் தேகச் சூட்டை அனுபவித்து தரும் முத்தம் வரை, எல்லா தருணங்களிலும் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முத்தம் தான் உதவுகின்றது. இப்படிப்பட்ட முத்தத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்களும் இருக்கு...
1. முத்தம் கொடுக்கும் போது, வாய் வழியாக பரிமாறிக்கொள்ளப் படும் ஒரு வகை பாக்டீரியாவால் பற்சிதைவு உண்டாவது தடுக்கப் படுகின்றதாம்.
2. மன அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முத்தங்கள் பயன்படுகின்றதாம்.
3. முத்தங்கள் பற்றிய அறிவியல் படிப்பிற்கு Philematology என்று பெயர்.
4. குழந்தைகளுக்கு காதுகளில் கொடுக்கப்படும் முத்தத்தால் அவர்களின் செவிப்பறையில் காற்றழுத்தம் ஏற்பட்டு செவிட்டுத்தன்மை உண்டாக வாய்ப்பு உள்ளதாம்.
5. தாய்லாந்தில் ஒரு ஜோடி 58 மணி நேரம், 35 நிமிடங்கள், 58 வினாடிகள் பரிமாறிக்கொண்ட முத்தமே உலகின் மிக நீளமான முத்தமாக கின்னஸில் பதிவாகி உள்ளது.
6. யூ டியூபில், முத்தம் எப்படி கொடுப்பது? என்பது பற்றிய தேடலே அதிகமாக உள்ளதாம்.
7. முத்தம் கொடுக்கும்போது முகத்தில் உள்ள 32 தசைகளும் வேலை செய்வதால், முகச்சுருக்கங்கள் உண்டாகும் பாதிப்பு குறைகிறதாம். முத்தங்களைப் பற்றி இன்னும் பேசிக்கிட்டே போலாம். ஆனா, நீங்க கடுப்பு ஆயிடுவீங்க..ஸோ, நீங்களே கிஸ் அடிச்சு தெரிஞ்சுக்கோங்க...