Theme Check

பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த கே.கே. காலமானார்!!

பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த கே.கே. காலமானார்!!

பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த கே.கே. காலமானார்!!
X

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் () கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவு காலமானார்.

கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. தமிழ் திரைப்படங்களில் சுமார் 66 பாடல்களை அவர் பாடியுள்ளார்.

காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் கேகே. அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார்.

அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

kk1

கேகேவின் மறைவுக்கு பிரதமர் மோடி முதல் இசையமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேகேவின் மறைவு இசை உலகின் பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it