Theme Check

கே.எல்.ராகுல் விலகல்.. ரிஷப் பந்த்-க்கு ஐபிஎல் அனுபவம் கைகொடுக்குமா?

கே.எல்.ராகுல் விலகல்.. ரிஷப் பந்த்-க்கு ஐபிஎல் அனுபவம் கைகொடுக்குமா?

கே.எல்.ராகுல் விலகல்.. ரிஷப் பந்த்-க்கு ஐபிஎல் அனுபவம் கைகொடுக்குமா?
X

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. விரைவில் 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால் இத்தொடர் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடங்குகிறது.

harthik pandiya

ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியை கேஎல் ராகுல் வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகியுள்ளார். அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

harthik pandiya

மேலும் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் டெல்லி அணியை வழிநடத்தினார். அவர் சிறப்பாக செயல்பட்டாலும் அணி அரையுறுதிக்கு தகுதிபெறவில்லை. அதேபோல் ஹர்திக் பாண்டியா தலைமை வகித்த குராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு விளையாடிய 12 டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்போட்டியை வென்றால் தொடர்ச்சியாக 13 போட்டிகளை வென்று வரலாறு படைக்க முடியும்.


newstm.in

Next Story
Share it