ரயிலில் கமல்ஹாசனின் 'விக்ரம்' பட டீம் - வைரல் வீடியோ !!
ரயிலில் கமல்ஹாசனின் 'விக்ரம்' பட டீம் - வைரல் வீடியோ !!

'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரயில் ஒன்றில் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் ஏற்கனவே முடிந்து, தொழில்நுட்ப பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மூன்று பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, படத்தை தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரயில் ஒன்றில் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ஓடும் ரயிலில் விக்ரம் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு விளப்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை சதர்ன் ரயில்வே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பின்னணியில் 'விக்ரம்' படத்தின் தீம் மியூசிக் ஒலிக்க, ரயிலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Good news for movie buffs!
— Southern Railway (@GMSRailway) April 19, 2022
A novel initiative to generate Non-fare revenue, a WAP 7 loco (30449) at Erode has been branded showcasing the official first look poster of legendary actor Kamal Hassan's upcoming tamil film 'VIKRAM' #SouthernRailway @ikamalhaasan #movie #tamil pic.twitter.com/fKdYONLYnk
newstm.in

