Theme Check

இனி கமல் கிடையாது... பிக்பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு வருகிறார் சிம்பு !!

இனி கமல் கிடையாது... பிக்பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு வருகிறார் சிம்பு !!

இனி கமல் கிடையாது... பிக்பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு வருகிறார் சிம்பு !!
X

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருப்பதால் மக்கள் இந்த வகை நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கின்றனர். பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் முதன் முறையாக 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியது.

தொடர்ந்து 5 சீசன்களாக நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தது கூடுதல் பலமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது.

simbu

இந்நிகழ்ச்சியில் சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கிட்டத்தட்ட 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். நேரமின்மை மற்றும் படங்களில் பிஸி, அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இது தற்காலிக இடைவெளிதான். விரைவில் விஜய் டிவியில் தொடங்கவிருக்கும் 'பிக் பாஸ் சிசன் 6'-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

simbu

இந்நிலையில், இனிமேல் இந்த நிகழ்ச்சியின் ஆங்கர் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. நடிகை ரம்யா கிருஷ்ணன் பெயர் அடிப்பட்ட நிலையில் தற்போது சிம்பு தான் பிக் பாஸ் அல்டிமேட் ஆங்கர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் டிவியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான பிரதீப் மில்ராய் பீட்டருக்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையிலான நட்பு மிகநெருக்கமானது. தற்போது பிரதீப் மில்ராய் கேட்டுக் கொண்டதன் பேரில் பிக் பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிம்பு எனவும் கூறப்படுகிறது.


newstm.in

Next Story
Share it