இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கைப்பட கடிதம் எழுதிய கமல்!!
இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கைப்பட கடிதம் எழுதிய கமல்!!

கமல்ஹாசன் நடிப்பில், லோகஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள விக்ரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குநரை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.
கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உட்பட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

விக்ரம் திரைப்படம் வெளியான 3 நாட்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் திரைப்படங்களில் அதிகம் வசூலித்த, ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக விக்ரம் பார்க்கப்படுகிறது.
திரைப்படத்தின் வெற்றி கமல்ஹாசனை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை கமல் எழுதியுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
“Life time settlement letter”
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/5yF4UnGnVj
newstm.in

