Theme Check

நடுக்கடலில் படகில் பயணித்து மீன் குழம்பை ருசிபார்த்த கனிமொழி எம்.பி. !!

நடுக்கடலில் படகில் பயணித்து மீன் குழம்பை ருசிபார்த்த கனிமொழி எம்.பி. !!

நடுக்கடலில் படகில் பயணித்து மீன் குழம்பை ருசிபார்த்த கனிமொழி எம்.பி. !!
X

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சக்திவேல் "தூத்துக்குடி மீனவன்" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். 11 லட்சம் சப்ஸ்கிரைபர்களை (Subscribers) கொண்ட இவரது சேனல் மிகவும் பிரபலமாக உள்ளது. மீனவர்கள், மீன்கள், கடல் விஷயங்கள் குகறித்து தனது வீடியோவில் கூறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், கடலில் படகில் பயணித்தவாறு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி அவருடன் உரையாடியுள்ளார். எம்.பி. கனிமொழி தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு சென்றார்.

fsdf

அங்கு சென்ற அவரை தூத்துக்குடி மீனவன் குழுவினர் வரவேற்று படகில் கடலுக்கு அழைத்து சென்றனர். கைகளால் கடல் நீரினை வருடிய படி பயணத்தை அனுபவித்த கனிமொழி வலை மற்றும் கூண்டு வைத்து மீன் பிடிப்பது, பவளப்பாறைகள் நிலை, கடல் பயணம் குறித்து யூடியூபர் சக்திவேலுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் நடுக்கடலில் மீனவர்கள் சமைத்த மீன் குழம்பு உணவை வழங்கினர். அதனை கனிமொழி சாப்பிட்டு மகிழ்ந்தார். கடல் பயணத்தின் போது பவளப்பாறைகள் அழிந்து வருவதை நேரில் கண்டதாகவும், அதனை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக எம்.பி. கனிமொழி அதன்பின்னர் தெரிவித்தார்.



newstm.in

Next Story
Share it