Theme Check

கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்.. முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!

கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்.. முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!

கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்.. முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!
X

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன்.3-ந்தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி உருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதை செயல்படுத்தும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று (3-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
latest tamil news
தொடர்ந்து, கனிமொழி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை பாரிமுனையில் நடந்த விழாவில் திமுக மூத்த முன்னோடிகள் 1300 பேருக்கு பொற்கிழி மற்றும் புத்தாடைகளை ஸ்டாலின் வழங்கினார்.

எம்எல்ஏ உதயநிதி ஸ்டலின் மலர் கண்காட்சியை திறந்து வைத்தார். கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது.

Next Story
Share it