Theme Check

ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்! கார் ஓட்டுநர் கைது!!

ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்! கார் ஓட்டுநர் கைது!!

ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்! கார் ஓட்டுநர் கைது!!
X

சென்னைல் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற கார் ஓட்டுனரை வில்லிவாக்கம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொளத்தூர் கண்ணகி நகரை சேர்ந்த 47 வயது நபருக்கு இரண்டு மகள்களும், மகனும் உள்ளனர். பிளஸ் 2 படித்து வந்த அவரது கடைசி மகள் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் கார் ஓட்டுனரான குமார் (26) என்பவர், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று, திருமணம் செய்ததாக தெரிகிறது. விஷயம் தெரிய வந்ததும் சிறுமியின் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
G
சிறுமி வழக்கு என்பதால் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு இந்த புகார் மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் சிறுமியையும் குமாரையும் தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு வந்தார்.
அதைத் தொடர்ந்து சிறுமியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அரக்கோணம் அருகில் தலைமறைவாக இருந்த, குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து, கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. குமார் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
Newstm.in
Next Story
Share it