Theme Check

பல் துலக்காமல் முத்தம்.. எதிர்ப்பு தெரிவித்த மனைவி குத்திக் கொலை..!

பல் துலக்காமல் முத்தம்.. எதிர்ப்பு தெரிவித்த மனைவி குத்திக் கொலை..!

பல் துலக்காமல் முத்தம்.. எதிர்ப்பு தெரிவித்த மனைவி குத்திக் கொலை..!
X

கேரளாவில், பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், காலை தூங்கி எழுந்த அவினாஷ் தன் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சியுள்ளார்.
பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததால் தகராறு; மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்!
இதைப் பார்த்த தீபிகா, “பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள்..?” எனக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபம் அடைந்த அவினாஷ், மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்தனர்.

Next Story
Share it