சிஎஸ்கே அணியை வீழ்த்திய கொல்கத்தா!!
சிஎஸ்கே அணியை வீழ்த்திய கொல்கத்தா!!

ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் கான்வே 3 ரன்களில் அவுட்டானார்.

உத்தப்பா 28 ரன்னிலும், அம்பாதி ராயுடு 15 ரன்னிலும், ஷிவம் துபே 3 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி நிதனமாக விளையாடினர். இறுதி ஓவர்களில் தோனி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
சிஎஸ்கே அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணி சிறப்பாக விளையாடியது. வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களிலும், நிதிஷ் ராணா 21 ரன்களில் அவுட்டாகினர்.

ராஹானே 34 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார். கொல்கத்தா அணி இறுதியாக 18.3 ஒவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 20 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
newstm.in

