ரசிகர்கள் குஷி... வெளியானது பீஸ்ட் அப்டேட் ..!!
ரசிகர்கள் குஷி... வெளியானது பீஸ்ட் அப்டேட் ..!!

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ராணுவ கமாண்டாவாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டள்ளது.
இதோ அந்த அப்டேட் உங்களுக்காக
#BeastFirstSingle - #ArabicKuthuOnFeb14
— Sun Pictures (@sunpictures) February 7, 2022
Wait.. #ArabicKuthu? 🤨 Appadina? Therinjika indha link ah click pannunga:
▶ https://t.co/dSqP98cWt1@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @manojdft @Nirmalcuts #Beast

