பென்ஸ் காரைவிட விலை அதிகமுள்ள எல்.ஜி டிவி!!
பென்ஸ் காரைவிட விலை அதிகமுள்ள எல்.ஜி டிவி!!

பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபயோக சாதனங்களில் முன்னணி நிறுவனமான எல்ஜி சமீபத்திய ஓஎல்இடி டிவியின் விலை பென்ஸ் காரை விட அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எல்ஜி நிறுவனம் தனது சிக்னேச்சர் OLED டிவியை குறைவான விலையில் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்பொழுது இந்தியாவில் புதிய ரோல் செய்யக்கூடிய OLED டிவியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை ₹75,00,000! அதாவது ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் E-கிளாஸ் காரின் விலையை விட LGயின் இந்த டிவி விலை அதிகம். எனவே உலகமே இந்த டிவியில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது.

ரோலபில் OLED டிவி என்பது நீங்கள் டிவி பார்க்காத போது, தானாகவே ரோல் செய்து கொள்ளும். அதாவது, இந்த மாடல், மடித்து வைக்கக்கூடிய ஒரு டிவியாகும். இந்திய மார்க்கெட்டில் முதன்முறையாக LG நிறுவனம், ரோல் ஆகக் கூடிய ஒரு டிவியை வெளியிட்டுள்ளது.
ஒரு பக்கம் கிட்டத்தட்ட முக்கால் கோடி ரூபாய்க்கு ஒரு ஃபிளாக்ஷிப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ள LG நிறுவனம், அதே கேட்டகிரியில் அதாவது OLED டிவி வரிசையில் மிக மிகக் குறைந்த விலையிலும் டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் OLED டிவி வகையை ₹90,000 க்கு வாங்கலாம். அதாவது இந்த சீரிஸின் ஆரம்ப விலை ₹89,999 மற்றும் இதன் ஃபிளாக்ஷிப் சிக்னேச்சர் சாதனத்தின் விலை ₹75,00,000.
newstm.in

