Theme Check

எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இனி கிடையாது.. தமிழக அரசு அறிவிப்பு..!

எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இனி கிடையாது.. தமிழக அரசு அறிவிப்பு..!

எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இனி கிடையாது.. தமிழக அரசு அறிவிப்பு..!
X

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வரும் நிலையில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 2,831 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டு (2022-2023) முதல் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அத்துடன், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் வெவ்வேறு அரசுப் பள்ளிகளின் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பதிலாக அங்கன்வாடி குழந்தைகள் மையங்களை தரம் உயர்த்த உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it