லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் கல்யாண ஆல்பம் வெளியானது..!!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் கல்யாண ஆல்பம் வெளியானது..!!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் கல்யாண ஆல்பம் வெளியானது..!!
X

தென்னிந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இன்று திருமணம் செய்து கொண்டனர். மாமல்லபுரத்தில் தனியார் நட்சித்திர ஹோட்டலில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கான விழா ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஈ.சி.ஆர் சாலையிலுள்ள ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருமண விழாவுக்கு அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த விழாவில் முன்னணி திரைபிரலங்கள் பங்கேற்றுள்ளனர்.பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், ஷாலினி அஜித், சூர்யா மற்றும் ஜோதிகா, ராதிகா, சரத்குமார், இயக்குனர்கள் கே.எஸ் ரவிக்குமார், மணிரத்னம், மோகன்ராஜா, அட்லீ, எஸ்,ஜே சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் போனி கபூர், திவ்யதர்ஷினி, மலையாள நடிகர் திலீப், உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகிய இருவரும் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர்.

1

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர்.இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று காலை 10.25 மணிக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவின் ஒளிபரப்பு உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட பொதுமக்களையும் செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.தற்போது இருவரின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.


இந்நிலையில் மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கல்யாணத்தில் தாலியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக் கொடுக்க, விக்னேஷ் சிவன் கண்களில் நீர் ததும்ப நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார்.

Tags:
Next Story
Share it