Theme Check

சென்னை பள்ளிக்கரணையில் பிங்க் நிறத்தில் மாறிய ஏரி... மக்கள் அதிர்ச்சி..!!

சென்னை பள்ளிக்கரணையில் பிங்க் நிறத்தில் மாறிய ஏரி... மக்கள் அதிர்ச்சி..!!

சென்னை பள்ளிக்கரணையில் பிங்க் நிறத்தில் மாறிய ஏரி... மக்கள் அதிர்ச்சி..!!
X

சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் சதுப்பு நிலம் ஏரி ஒன்றில் நீரானது திடீரென பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிப்போரை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியின் வண்ணம் உருமாறியதற்கு ஆல்கே எனப்படும் பூஞ்சைகள் வளர்ந்திருப்பதே காரணம் ஆக இருக்க கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த ஏரியில் சையனோ பாக்டீரியா வளர்ச்சி அடைந்து, அதனால் நிறம் மாறியிருக்க கூடும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர். அந்த ஏரியை ஆளில்லா விமானம் ஒன்றின் உதவியுடன் மேலிருந்து படம் பிடித்து உள்ளனர். அதில், அந்த ஏரி பளிச்சென்ற பிங்க் வண்ணத்தில் காட்சியளிக்கிறது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பணியாளர்கள் ஏரியில் இருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர்.

Next Story
Share it