Theme Check

நில மோசடி விவகாரம்… சிக்கலில் ஓபிஎஸ் தம்பி!?

நில மோசடி விவகாரம்… சிக்கலில் ஓபிஎஸ் தம்பி!?

நில மோசடி விவகாரம்… சிக்கலில் ஓபிஎஸ் தம்பி!?
X

தேனி மாவட்டத்தில் 2016 முதல் 2018 வரை அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் .பன்னீர்செல்வம் உதவியாளரும், பெரியகுளம் தெற்கு ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளருமான அன்னப்பிரகாஷ் மற்றும் முக்கியப் புள்ளிகள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெரியகுளம் கோட்டாட்சியர்களாக பணியாற்றிய அதிகாரிகளின் உதவியாளர்கள் அழகர், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, முதல்கட்டமாக அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அதிகாரிகளின் உதவியாளர் அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரையும் போலீசார் எடுத்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

op raja

கடந்த அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தை .பன்னீர்செல்வத்தின் தம்பி .ராஜா தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். எனவே மணல், ஜல்லி விற்பனை எல்லாம் இவரது கண்காணிப்பில் தான் நடந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் கனிம வளங்கள் அதிக அளவில் கொள்ளை போயிருப்பதற்கு இவர்கள் தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

.ராஜா மீது குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், .பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் விரைவில் அதிமுக அதிரும் வகையில் சில அதிரடிகள் அரங்கேறும் என்று கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it