Theme Check

வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு!!

வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு!!

வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு!!
X

வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் கடைசி தேதிக்குள் வெரிஃபை செய்யும்படி வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது.

2020-21ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (Assessment year) வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் இம்மாத இறுதிக்குள் வெரிஃபை (verify) செய்ய வேண்டுமென வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

வெரிஃபை செய்யப்படாத வருமான வரித் தாக்கல் முழுமையற்றதாக எடுத்துக்கொள்ளப்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இதற்கு வருமான வரித் துறை கால அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

it

இந்நிலையில், வருமான வரி ரிட்டனை வெரிஃபை செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கிறது வருமான வரித் துறை. இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28. 2020-21ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமான வரி ரிட்டனை வெரிஃபை செய்வதற்கான கடைசி வாய்ப்பை தவறவிடாதீர்கள் என வருமான வரித்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

வருமான வரி ரிட்டனை ஆன்லைனிலேயே வெரிஃபை செய்யலாம். இதற்கு வருமான வரி இணையதளத்தில் உள்ள 'Quick Links' பிரிவுக்கு செல்லவும். அதில் உள்ள 'e-Verify Return' பகுதியில் வருமான வரி ரிட்டனை வெரிஃபை செய்துவிடலாம்.

newstm.in

Next Story
Share it