Theme Check

மதுபான பாரை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்

மதுபான பாரை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்

மதுபான பாரை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்
X

ஹைஃபை பார் என்ற டாஸ்மாக் மதுபானக்கூடம் சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில்

இயங்கி வருகிறது. இங்கு சென்னை தரமணி சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சுதாகர்(23), விஷ்ணு(22), உள்ளிட்ட நான்கு பேர் மது அருந்துவதற்காக வந்துள்ளனர்.

மது அருந்திவிட்டு பாரிலிருந்து புறப்படும் போது பார் ஊழியர் அஜித், அதிக நேரம் அமர்ந்திருந்ததாகக் கூறி மாணவர்களிடம் கூடுதல் பணம் கேட்டுள்ளார்.

velachery

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணம் தர முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற மாணவர்கள் சக கல்லூரி மாணவர்களிடம் இது பற்றிக் கூறி 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று கத்தி, மதுபாட்டில், கற்கள் கொண்டு மதுபானக்கூடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் பார் ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் காலிலும், பார் ஊழியர் அஜித்குமாருக்கு கன்னத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

Taramani-law-college

இதுகுறித்து பார் உரிமையாளரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் பார் ஊழியர்கள், சட்டக்கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it