முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் பிவிஆர் – ஐநாக்ஸ் இணைப்பு!!
முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் பிவிஆர் – ஐநாக்ஸ் இணைப்பு!!

இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் லிமிலெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலியும், செயல் இயக்குநராக சஞ்சீவ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தங்களிடம் ஏற்கனவே உள்ள பிராண்டிங்குடன் பிவிஆர் ஐநாக்ஸ் லிமிட்டெட் என பெயரிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
Next Story

