மீண்டும் கசிந்த வினாத்தாள்! ஆனாலும் தமிழக அரசின் அதிரடி முடிவு!!
மீண்டும் கசிந்த வினாத்தாள்! ஆனாலும் தமிழக அரசின் அதிரடி முடிவு!!

10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் மீண்டும் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாள், முன்கூட்டியே இணையத்தில் கசிந்துள்ளது. இன்று நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாளும் கசிந்துள்ளது.
ஏற்கெனவே 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த 2 தினங்களாக வினாத்தாள்கள் கசிந்து வந்த நிலையில், மீண்டுமொருமுறை வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும் வினாத்தாள் வெளியானது தொடர்பாக இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
வினாத்தாள் கசிந்திருப்பது தொடர்பாக இரண்டு பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
news

