லீவு வேணும்னா படுக்கைக்கு அழைக்கிறார்.. எஸ்பி அலுவலக பெண் ஊழியர் புகார்..!
லீவு வேணும்னா படுக்கைக்கு அழைக்கிறார்.. எஸ்பி அலுவலக பெண் ஊழியர் புகார்..!

கர்நாடக மாநிலம் கொப்பல் எஸ்பி அலுவலகத்தில் ‘டி’ குரூப் ஊழியராக பணிபுரியும் விதவை ஒருவர், உதவி நிர்வாக அதிகாரி மல்லிநாத் (45) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “அனுதாபத்தின் அடிப்படையில் எனக்கு வேலை கிடைத்துள்ளது. மல்லிநாத் எனக்கு தினமும் பாலியல் தொந்தரவு தருகிறார்.
விடுமுறை வேண்டும் எனக் கேட்டால், ‘உனக்கு கணவன் இல்லை; உனக்கு எதுக்கு விடுமுறை, நான் உன் வீட்டுக்கு வரவா..?’ என்கிறார்.
‘விடுமுறை வேண்டும் என்றால் என்னுடன் இரவு லாட்ஜுக்கு வர வேண்டும். உனக்கு பணமும், சுகமும் தருகிறேன்’ என்கிறார். மறுத்தால், சம்பளத்தில் கை வைக்கிறார்.
இது குறித்து கடந்த 2019-ல் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதைய எஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.

